மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

By செய்திப்பிரிவு

மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத் துள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்த பள்ளி மாணவர் ரமேஷ் (17). கடந்த 7-ம் தேதி பள்ளியில் இவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து ரமேஷ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மாணவனின் மூளையில் உள்ள ரத்தக் குழாய் வெடித்தது தெரியவந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் மாணவன் ரமேஷ் மூளைச்சாவு அடைந் ததை உறுதிசெய்த டாக்டர்கள் அதை அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் மகனின் உடல் உறுப்பு களை தானம் செய்ய அவரது பெற்றோர் விருப்பம் தெரிவித் தனர். அதன்படி மாணவனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

அவரது ஒரு சிறுநீரகம், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும் மற்றொரு சிறுநீரகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும் பொருத்தப் பட்டது. இதயம் மற்றும் நுரையீரல் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப் பட்டது.

இதுதொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:

மாணவனின் ஒரு சிறுநீரகத்தை இங்கு சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தி யுள்ளோம். அவர் தற்போது நலமாக இருக்கிறார். மற்ற உறுப்புகள் தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்பப்பட் டுள்ளன. உடல் உறுப்பு தானத் தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்