அமிர்தசரஸ் ரயில் விபத்து: ஸ்டாலின் மன வருத்தம்

By செய்திப்பிரிவு

அமிர்தசரஸ் ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை பஞ்சாப் மாநில அரசு செய்து தர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாபில் தசரா விழாவின் போது நடக்கும் ராவண வதம் நிகழ்ச்சியை தண்டவாளத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க் கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''50 பேருக்கும் மேல் பலியான அமிர்தசரஸ் ரயில் விபத்து, மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தர கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்