கடந்த 7 ஆண்டுகளில் 11 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.417 கோடி நிதி: மாநாட்டில் அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த 7 ஆண்டுகளில் 11 லட்சத்து 5 ஆயிரத்து 823 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.417 கோடியே 41 லட்சம் செலவில் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகள், கட்டு மானங்கள் மற்றும் சுரங்கங்களில் ‘விபத்தில்லா நோக்கு’ குறித்த 2 நாட்கள் சர்வதேச மாநாடு சென்னை கிண்டியில் நேற்று தொடங்கியது. தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார இயக்ககத் தின் இயக்குநர் கே.மனோகரன் வரவேற்றார்.

கட்டுமான மற்றும் சுரங்கத்துறை தொழிலாளர்களின் தற்போதுள்ள பாதுகாப்பு மேம்பாடுகளும், அதன் அவசியம் மற்றும் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் குறித்து சர்வதேச சமூக பாதுகாப்பு அமைப் பின் தலைவர் கார்ல் ஹேன்ஸ் நொய்டால், ஜெர்மன் தூதரக சமூக, தொழிலாளர் நல அதிகாரி டமோதியஸ் பெல்டர் ரூஸ்டி, மத்திய அரசின் தொழிற்சாலை ஆலோசனை சேவை, தொழிலாளர் பயிற்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் அவிநேஷ் சிங் ஆகியோர் விரிவாக பேசினர்.

இதையடுத்து, தமிழக தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாநாட்டு மலரை வெளியிட்டு பேசியதாவது:

நம் நாட்டில் கட்டுமானத் துறையில் அதிக அளவில் அமைப் புசாரா தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 8,974 கட்டுமான நிறுவனங்களில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 382 தொழி லாளர்கள் கட்டுமான தொழிலா ளர் சட்டத்தின்கீழ் பதிவு செய் துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் தையூர், எழுச்சூர் ஆகிய இடங்களில் தொழிலாளர்களுக்கான தங்கு மிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதே போல், திருச்சி, சேலம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங் களில் 7 இடங்களில் தங்குமிடங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் இறக்கும்போது ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படு கிறது. கடந்த 7 ஆண்டுகளில் 7 லட்சத்து 80 ஆயிரத்து 59 கட்டுமான தொழிலாளர் கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், நல வாரியத்தின் மூலம் 11 லட்சத்து 5 ஆயிரத்து 823 தொழிலாளர்களுக்கு ரூ.417 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 604 செலவில் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவாக இந்தோ - ஜெர்மன் அமைப்பின் இயக்குநர் பிமல் கன்டி சாகு நன்றி கூறினார். இந்த மாநாட்டில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் (ஓய்வு) கு.காளியண்ணன், தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்