அரசு அலுவலகங்களில் #Metoo: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

அரசு அலுவலகங்களிலும் மீடூ உள்ளது என செய்தி வந்ததை அடுத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக பெண் ஊழியர் அளித்த புகாரை விசாரிக்காத விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் 4 வாரத்தில் விளக்கமளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையில் பணியாற்றும் பெண் ஒருவர், அந்த துறையின் தாசில்தார் மீது மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ், முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆங்கில இதழில் செய்தி வெளியானது.

இதை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி ஜெயச்சந்திரன் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மூன்று கேள்விகளை வைத்து அதற்கு 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

நீதிபதி எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) திருநெல்வேலி மாவட்டத்தில் உட்புகார் விசாரணை குழுக்கள் ஏன் அமைக்கப்படவில்லை?

2) தாசில்தார் மீதான பாலியில் புகாரில் நடவடிக்கை எடுக்க ஏன் தவறினீர்கள்?

3) பெண் அலுவலர் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து மனித உரிமை மீறல் ஆகாதா?

இவற்றிற்கு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

21 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

34 mins ago

உலகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வணிகம்

7 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்