கருணாநிதி- ஸ்டாலின் ஒப்பீடு: டிடிவி தினகரன் பதில்

By செய்திப்பிரிவு

 

கருணாநிதி இருந்திருந்தால் இந்த ஆட்சி கலைந்திருக்கும் ஸ்டாலின் அவ்வளவு திறமையானவர் இல்லையா? என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

சென்னையில் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:

நீங்கள் அளித்த பேட்டியால் ஓபிஎஸ்- ஈபிஎஸ் உறவு பாதிக்காதா?

இப்போது என்னவோ இரண்டு பேரும் ஒற்றுமையாக இருப்பதுபோல் சொல்கிறீர்கள். இருவரும் கத்தியை முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்து பழகி வருகிறார்கள்.

இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும்?

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு வந்த பின்னர் ஓட்டெடுப்பு வரும்வரை நிற்கும்

நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வருமா?

அப்படி வரணும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம், அப்படித்தான் வரும் என்கிற நம்பிக்கைத்தான் எனக்கு இருக்கிறது.

பிரதமரின் தலையீடு எந்த அளவுக்கு இந்த ஆட்சியின்மீது உள்ளது?

எத்தனை சதவிகிதம் என்று கேட்கிறீர்களா? மத்திய அரசியின் ஆசியுடந்தான் இந்த ஆட்சி செயல்படுகிறது. கடைகோடி கிராமத்தில் உள்ள குப்பனுக்கும் சுப்பனுக்கும்கூட இது தெரியும். இதை கேள்வியாக கேட்கிறீர்களே.

திமுக தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் ஆட்சி கலைந்திருக்கும், ஸ்டாலினுக்கு அந்த அளவு திறமையில்லை என்று கூறுவது குறித்து?

அதைப்பற்றி எல்லாம் ஹேஸ்யம் சொல்லும் அளவுக்கு நான் பெரிய அரசியல் ஞானி எல்லாம் கிடையாது. ஸ்டாலின் இதை செய்திருப்பாரா? செய்திருக்க மாட்டாரா? என்கிற விவாதத்துக்கெல்லாம் பதில் சொல்லும் அளவுக்கு இது சரியான கேள்வியாக எனக்கு தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்