இந்து சமய அறநிலையத் துறை கோயில்களை பராமரிப்பதில்லை: எச்.ராஜா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை முறையாகப் பராமரிப்பதில்லை என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

திருச்சி பீமநகரில் உள்ள செடல் மாரியம்மன் கோயிலுக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தக் கோயிலைச் சுற்றி கடைகள் உள்ளன. இந்தக் கோயி லுக்கு பல்வேறு இடங்களில் நிலங் கள் உள்ளன. ஆனால், அவை முறையாகப் பராமரிக்கப்படாத தால் கோயிலுக்கு இதுவரை கும்பா பிஷேகம் நடைபெறவில்லை.

கோயில் வருமானம் முழுவதை யும் அறநிலையத் துறையே எடுத் துக் கொள்கிறது. அதேவேளை யில், கோயிலைப் பராமரிப்ப தில்லை. அதன்படி, இந்தக் கோயி லின் சொத்துகளும் பராமரிக்கப் படாமல் மாற்று மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, அறநிலையத் துறை சட்டம் பிரிவு 29-ல் கோயில் சொத்துகள் குறித்த பட்டியல், ஆவ ணம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், எந்தக் கோயிலிலும் இந்த ஆவணம் பராமரிக்கப்படவில்லை என்று நீதிபதி மகாதேவன் தீர்ப் பில் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதிலும் ஆயிரக் கணக்கான கோயில்கள் சிதிலம டைந்து, வழிபாடு இல்லாமல், கைவிடப்பட்ட நிலையில், பராம ரிப்பு இல்லாமல் உள்ளன. தஞ்சா வூரில் சிவாச்சாரியார் ஒருவர் கும்பாபிஷேகம் செய்யத் தயாராக உள்ள நிலையில், திட்ட மதிப்பில் 25 சதவீத பணத்தை அதிகாரி ஒருவர் கேட்கிறார். மாநில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டி யராஜன், கோயில்களில் பல்லாயி ரக்கணக்கான சிலைகள் உள்ளதா கவும், ஆனால், அவை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை என்ற ஆவணம் இல்லை என்றும் கூறுகிறார்.

கோயில்களில் பதிவேடு 29-ஐ பராமரித்து, அதில் கோயிலுக்குச் சொந்தமான அனைத்துப் பொருட் கள், சொத்துகள் குறித்து பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு கோயில்களில் வைரஅங் கிகள், தங்க நகைகள் உட்பட எதற்கும் பதிவேடு இல்லை. எனவே, இந்து சமய அறநிலை யத் துறையை முழுமையாக தூர் வாராமல், இந்து கோயில்களைக் காப்பாற்ற முடியாது. இல்லை யெனில், இந்தத் துறை இந்து மதத்தை அழித்துவிடும்.

அரசு மதச்சார்பற்றதாக இருக்க லாம். ஆனால், இந்து சமய அற நிலையத் துறை மதம் சார்ந்தது. எனவே, அறநிலையத் துறை அதி காரிகள், ஊழியர்கள் மாற்று மத த்தைப் பின்பற்றுவது கண்டறியப் பட்டால் அவர்களை உடனடியாக அறநிலையத் துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்