பாஜகவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர் கருணாநிதி: சென்னையில் நடந்த நினைவேந்தலில் மத்திய அமைச்சர் கட்கரி பெருமிதம்; சமூகநீதியை காக்க வாழ்வை அர்ப்பணித்தவர் என குலாம்நபி ஆசாத் புகழாரம்

By செய்திப்பிரிவு

சமூகநீதி, மதச்சார்பின்மையை காக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் கருணாநிதி என தேசியத் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் தேசிய தலைவர் கள் பங்கேற்ற புகழ் வணக்க கூட்டம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று மாலை 5.08 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்ற தேசிய தலைவர்கள் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித் தார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

பின்னர் தேசியத் தலைவர்கள் பேசியதாவது:

மத்திய கப்பல், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி:

பாஜகவுடன் நீண்ட காலமாக, நெருங்கிய உறவு வைத்திருந்தவர் கருணாநிதி. நெருக்கடி நிலை பிரகடனத்தை முதலில் எதிர்த்தது திமுக அரசு. அதனால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஸ்டாலின் உட்பட பலர் கைதாகினர். நெருக் கடி நிலையை எதிர்த்து 1975-ம் ஆண்டு ஜூலையில் மெரினா வில் மிகப்பெரிய மாநாட்டை கருணா நிதி நடத்தினார். அதில் லட்சக் கணக்கானோர் கலந்துகொண்டனர். தமிழ் திரைத்துறை, இலக்கியம், இதழியலுக்கு கருணாநிதி ஆற்றிய பங்கு அளப்பரியது. ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் நாளொன்றுக்கு 15 முதல் 20 மணி நேரம் உழைக்கக்கூடியவர் கருணா நிதி. அவரைப் போன்ற மனிதரை காண்பது அரிது. மத்தியில் கூட்டணி ஆட்சியை உருவாக்குவதில் முன் னோடியாக திகழ்ந்தவர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்:

40 ஆண்டுகளாக கருணாநிதிக் கும், எனக்குமான நட்பு தொடர்ந் தது. கடைசி வரை தனக்கு பிடித்த எழுத்துப் பணியை அவர் கைவிட வில்லை. போக்குவரத்து நாட்டு டைமை, கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் அமைத்தது, விவ சாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை ஆகியவற்றை கொண்டு வந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தவர் கருணாநிதி. சமூகநீதி, மதச்சார் பின்மையை காக்க வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா:

அடித்தட்டு மக்களின் நலனுக் காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கருணாநிதி. திராவிட இயக்கத்தை அரை நூற்றாண்டுக் கும் மேலாக முன்னெடுத்துச் சென் றவர் அவர். ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற் பட்டபோதெல்லாம் அதனை காக்க துணை நின்றவர். கருத்துரிமை, சமூகநீதி காப்பதில் உறுதியாக இருந்தவர். கூட்டணி அரசுகளை நிலைபெறச் செய்ததில் கருணா நிதிக்கு முக்கிய பங்கு உண்டு. மாநில கட்சியை கட்டமைப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. அந்த கடமை தற்போது ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறை வன் அவருக்கு எல்லா வலிமையும் அளிக்க வேண்டும்.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்:

இந்தியாவின் முதுபெரும் தலை வரான கருணாநிதி, சமூகநீதி, சமத்துவத்துக்காக வாழ்வை அர்ப் பணித்தவர். தாழ்த்தப்பட்டோர், பெண்களுக்காக பல்வேறு சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றி யவர். பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க காரணமாக இருந்தவர். தமிழகத் தின் இன்றைய வளர்ச்சிக்கு அவர் ஏற்படுத்திய உள்கட்டமைப்பு வசதி களும், தொழிற்சாலைகளுமே கார ணம். மத்தியில் பல்வேறு கூட்டணி ஆட்சி அமைய வித்திட்டவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி:

கருணாநிதியுடன் பல ஆண்டு கள் இணைந்து பணியாற்றியுள் ளேன். அவரிடமிருந்து பலவற்றை யும் கற்றுக்கொண்டுள்ளேன். நகைச் சுவை உணர்வு மிக்கவர் அவர். நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி. முற்போக்கு சிந்தனை இருந்தால் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை நிலைநாட்ட முடியும். அதற்கு முக்கியத்துவம் அளித்தவர் கருணாநிதி. அவரது வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டை முன்னேற்ற ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா:

ஜாதி, மதம், இனம், மொழி என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரையும் சமமாக மதித்து நடத்தியவர் கருணாநிதி. ஜனநாய கம், கூட்டாட்சி தத்துவத்தை வலுப் படுத்தியவர். அனைவருக்கும் சம உரிமைகள், சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். அப்போது தான் தேசிய ஒருமைப்பாடு பேணிக் காக்கப்படும் என்பதை உணர்ந்தவர். தற்போது நாட்டை சூழ்ந்துள்ள சவால்களை எதிர்கொள்ள கருணா நிதி காட்டிய வழியில் நாம் பய ணிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்தியில் உள்ள பாசிச ஆட்சியை வீழ்த்துவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி:

இந்தியாவின் மகத்தான தலை வர்களில் ஒருவரான கருணாநிதி, மக்கள் நலனுக்காகவே வாழ்ந் தவர். அதனால்தான் அவரது மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியை தாங்க முடியாமல் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சமூக, பொருளாதார மேம்பாட்டுக் காகவும், மொழியின் வளர்ச்சிக்காக வும் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தியவர். சமூகநீதி, மதச்சார் பின்மை, ஜனநாயகம், மாநில சுயாட்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல்:

தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கான தலைவ ராக திகழ்ந்தவர் கருணாநிதி. நான் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது கருணாநிதி முதல்வராக இருந்தார். சென்னை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம் போன்ற திட்டங்கள் குறித்து ஆலோசிக்கும் போது அவரது கூரிய அறிவுத் திறனையும், நவீன சிந்தனைகளை யும் கண்டு வியந்துள்ளேன். கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன்:

கூட்டாட்சி தத்துவத்தின் முக் கியத்துவத்தை உணர்ந்த கருணா நிதி, மத்தியில் குவிந்துள்ள அதி காரங்கள் மாநிலங்களுக்கு வர வேண்டும் என தொடர்ந்து போரா டினார். பகுத்தறிவாளரான கருணா நிதி, நவீன சிந்தனைகள் கொண் டவர். அவரது கொள்கைள், சிந் தனைகளை நாம் பின்பற்ற வேண் டும். அனைத்து மாநில கட்சிகளும் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மத்திய ஆட்சியை கைப்பற்ற வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். இதுவே கருணாநிதிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இவ்வாறு தலைவர்கள் பேசினர். தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ்.சவுத்ரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சோம்நாத் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்