தமிழக காவல் துறையில் 14,623 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர்

By செய்திப்பிரிவு

காவல் துறையில் உள்ள 14,623 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான முதல்வர் தனது பதிலுரையில் கூறும்போது, "ஆயுதப் படை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு ஏழு மாதம் அடிப்படை பயிற்சியும், ஒரு மாதம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நான்கு மாதம் அடிப்படை பயிற்சியும், ஒரு மாதம் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் அந்தந்த மாவட்டங்கள் / அணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

மேலும், இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கு 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டு, 13,078 ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் 180 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்துடன், 886 உதவி ஆய்வாளர்கள், 277 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் 202 விரல்ரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 1,365 உதவி ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஆகவே, நான்கு ஆண்டுகளாக உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தவறான கூற்று.

இவ்வாறு காலிப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பிவரினும், மாநிலத்தில் காவலர் எண்ணிக்கையின் விகிதம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, காவல் துறையினருக்கு காவல் பணிகளில் உதவியாக இருக்கும் வகையில்,"தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை" ஒன்றை அமைக்க உத்தரவிட்டதன் பேரில், 9,079 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 12.2.2014 அன்று முதல் ஒரு மாதகால அடிப்படை பயிற்சி முடித்து, தற்போது பல்வேறு காவல் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.

தற்போது, காவல் துறையில் பல்வேறு பதவிகளில் 20,506 காலிப் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இவற்றுள் 14,623 காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய அரசு உத்தரவிட்டு, அக்காலியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மீதமுள்ள 5,883 காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்காக மாவட்டங்களிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்