பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு: இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

By செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

மேலும், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கையையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது கூடுதலாக சுமார் 700 காலியிடங்கள் வந்துள்ளன. இறுதி தேர்வு பட்டியல் வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வர்கள் தங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணை தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) குறிப்பிட்டு, வேலைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறோமா, இல்லையா என்பதை அறியலாம்.

இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

9 mins ago

மேலும்