சென்னை விமான நிலையத்துக்கு 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரை பிடிக்க ராமநாதபுரம் விரைந்தது போலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையத்துக்கு 3-வது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க, சென்னை போலீஸார் ராமநாதபுரம் சென்றுள் ளனர்.

கடந்த 25-ம் தேதி காலை சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘என் பெயர் ஸ்டீபன். பெங்களூரில் இருந்து பேசுகிறேன். மத்திய உளவுத் துறையில் வேலை செய்கிறேன். பாகிஸ்தானில் இருந்து கைதேர்ந்த 10 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவி உள்ளனர். அவர்கள் விமான நிலையம் உட்பட 10 இடங்களை தகர்க்க உள்ளனர்’ எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

அன்று மாலை 4.30 மணிக்கு அதே நபர் மீண்டும் விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இயக்குநர் அலுவலகத்தில் காலர் ஐடி இல்லாததால் மிரட்டல் விடுத்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால், அங்கு உடனடியாக காலர் ஐடி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை காலை 10.15 மணிக்கு விமான நிலைய இயக்குநர் அலுவல கத்தை அதே நபர் தொடர்பு கொண்டார். தனது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தபின், ‘பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் சென்னை யில் ஊடுருவியுள்ளனர். அவர் கள் விமான நிலையம் உட்பட பல இடங்களை குண்டு வைத்து தகர்க்க உள்ளனர்’ எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

காலர் ஐடியில் அந்த நபரின் செல்போன் எண் பதிவானது. விமான நிலைய இயக்குநர் கொடுத்த புகாரின்பேரில் போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். பதிவான எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், ராமநாத புரம் முகவரியில் அந்த சிம்கார்டு வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த மர்ம நபரைப் பிடிக்க போலீஸார் ராமநாதபுரம் விரைந் துள்ளனர். 3-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள தால் விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

9 mins ago

சுற்றுலா

12 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

37 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்