மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தாத கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம்: அரசு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

By செய்திப்பிரிவு

மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தாத கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை. இதனால் மழைநீர் சேமிப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறைந்து விட்டது. மழைநீர் சேமிப்பு வசதியில்லாத கட்டிடங்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என விதிகள் உள்ள நிலையில், சமீபகாலமாக எந்த கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை முறையாக ஏற்படுத்துவதில்லை. எனவே மழைநீர் சேமிப்பு வசதி இல் லாத கட்டிடங்களின் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று பொறுப்பு தலைமை நீதி பதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. இதுதொடர்பாக மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு 8 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்