பலத்த போலீஸ் பாதுகாப்பு: டாஸ்மாக் கடைகளை 6 மணியுடன் மூட உத்தரவு

By செய்திப்பிரிவு

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ள நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடைகளை 6 மணியுடன் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக் யூனியன் உறுப்பினர் கூறும்போது ஏற்கெனவே சில கடைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் மீதி கடைகள் 6 மணிவாக்கில் மூடப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 5,000த்துக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர், இது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதி மகள் எம்.கே.செல்வி, மருமகள் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்துள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை புறப்பட்டுள்ளார். காவிரி மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்ததாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 min ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்