திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை: சுங்கத்துறை அதிகாரிகள், பயணிகளிடம் பல மணி நேரம் விசாரணை

By செய்திப்பிரிவு

திருச்சி விமானநிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டு சுங்கத் துறை அதிகாரிகள், பயணிகளிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த விமானத்தில் 6 வகையான பாம்புகள், பச்சோந்தி, தேள், வெளிநாட்டு வகை நட்சத்திர ஆமைகள், உடும்பு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வன உயிரனங் கள் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்டன. அவற்றை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். இவற்றை கடத்தி வந்த நிஜத், சையது இப்ராகிம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தகவலறிந்து வந்து உயிரினங் களை பார்வையிட்ட வனத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு உயிரி னங்களை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பி வைத்துவிடும்படி சுங்க அதிகாரி களிடம் கூறினர். இதை அடுத்து, உயிரினங்கள் அனைத்தும் விமான நிலையத்திலேயே வைக்கப் பட்டுள்ளன.

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகள், அவர்களின் உடைமை களை சுங்க அதிகாரிகள் சோதனை யிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விமானநிலை யத்துக்கு வந்து, சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள், சுங்கத் துறை அதிகாரிகள், விமான நிலை யத்தில் பணிபுரியும் பல்வேறு தனி யார் நிறுவனங்களின் ஊழியர்களி டம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பொருட்கள், ஆவணங் களையும் சோதனையிட்டனர்.

பயணிகள் என்ற போர்வை யில் கடத்தலில் ஈடுபட வாய்ப்பு உள்ளவர்கள் என சந்தேகப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியே அனுமதிக்கவில்லை. இரவு 8 மணி வரை விசாரணை நடந்தது. கடந்த 31-ம் தேதி மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் 6.3 கிலோ தங்கம், ரூ.10 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக விமான பராமரிப்பு தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய தாக தெரிகிறது.

இதேபோல 2015-ல் சிபிஐ அதிகாரிகள் திருச்சி விமானநிலை யத்தில் திடீரென சோதனை நடத்தி, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்க அதிகாரிகள் 6 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்