பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளிலிருந்து பாசன நிலங்களுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கைகளில், “விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேனி மாவட்டம், 18 ஆம் கால்வாயின் கீழ் உள்ள 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 279 கனஅடி வீதம் 9 நாட்களுக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தேனி மாவட்டம் 18 ஆம் கால்வாயினை சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் முடிவுற்றதைத் தொடர்ந்து, கால்வாய் நீட்டிப்பு திட்டப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து முதல் முறையாக சோதனை ஓட்டம் நடத்துவதற்கு பெரியாறு அணையிருந்து விநாடிக்கு 200 கனஅடி வீதம் 7 நாட்களுக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி வீதம் பாசனத்திற்காக புதன்கிழமை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், தேனி மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வைகை அணை 69 அடியை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இதனை சிறப்பு நிகழ்வாகக் கருதி 300 மி.க.அடி தண்ணீரை புதன்கிழமை முதல் முறையாக சோதனை ஓட்டத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 228.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
ஓடிடி களம்
24 mins ago
இந்தியா
2 mins ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
57 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
வலைஞர் பக்கம்
3 hours ago