மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்னை மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

By செய்திப்பிரிவு

மும்பையை தலைமையிடமாக கொண்டு தேனாம்பேட்டையில் செயல்படும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் தனியாருக்குச் சொந்தமான பிரபலமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு சென்னை மற்றும் பெங்களூரிலும் செயல்பட்டு வருகிறது. சென் னையில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் 6 பேர் கொண்ட தனிப்படையினர் நேற்று காலை சென்னை வந்தனர். காலை 7 மணிக்கு சம்பந்தப்பட்ட தனியார் மென் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். முன்னதாக உள்ளே இருந்த பணியாளர்களை வெளியே அனுப்பினர். அலுவலகங்களில் உள்ள முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து அதனை ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் மறுப்பு

சில ஆவணங்களை கையோடு எடுத்தும் சென்றனர். வரி ஏய்ப்பு செய்ததற்கான சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அதன் முழு விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சென் னையில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட தேனாம் பேட்டை போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து அதனை ஆய்வு செய்தனர். அதில் வரி ஏய்ப்பு செய்ததற்கான சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அதன் முழு விபரத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 secs ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்