31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியீடு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு கடைசி வாய்ப்பு

By செய்திப்பிரிவு

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் களின் வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் வெயிட் டேஜ் மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இறுதி தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள்-1) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப் பில் கலந்து கொண்ட 31 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.

விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) தங்கள் தகுதித்தேர்வு பதிவெண்ணை குறிப்பிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

4 இடங்களில் சிறப்பு முகாம்கள்

இந்த பட்டியலில், 2012-ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 2013-ம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள், பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் தேர்வு, தகுதித்தேர்வு ஆகியவற் றில் தங்களுக்கு அளிக்கப்பட் டுள்ள வெயிட்டேஜ் மதிப் பெண்ணை தனித்தனியே அறிந்து கொள்ளலாம்.

வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் முறையீடு செய்வதற்காக விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம் ஆகிய 4 இடங்களில் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

எந்தெந்த மாவட்டத்திற்கு எந்த இடத்தில் எந்தெந்த தேதிகளில் முகாம் நடத்தப்படுகிறது என்ற விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

மற்றவர்கள் வர வேண்டாம்

வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மாற்றம் இல்லாதவர்கள் சிறப்பு முகாமுக்கு வரத்தேவையில்லை என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் முகாமுக்கு குறிப்பிட்ட நாளில் வரும்போது, அனைத்து கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட 2 செட் நகல்களை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.

அதேபோல், முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் கீழ் சலுகைகோருவோர் ராணுவத் தில் பணியாற்றியதற் கான உரிய சான்றிதழை சிறப்பு முகாமில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரே முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டியது அவசியம்.

கடைசி வாய்ப்பு

கடந்த 2012-ம் ஆண்டு தேர்வு உட்பட இதுவரை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களும் குறிப்பிட்ட சிறப்பு முகாமில் குறிப்பிட்ட தேதியில் தேவை யான ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலியிடங்களின் பட்டியல் துறை ரீதியாக விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அவ்வப்போது பார்த்து வருமாறு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் தண்.வசுந்தராதேவி அறிவி்த்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

40 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்