போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.600 கோடியில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள்: பூர்வாங்கப் பணிகள் தொடங்கியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.600 கோடியில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கி விட்டதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் .உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந் தது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இக்கூட்டத் தில், செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், அனைத்து போக்கு வரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2016-ம் ஆண்டில் ரூ. 516 கோடி செலவில், 2,000 அதிநவீன பேருந்துகளும், 100 சிற்றுந்துகளும் வாங்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித் திருந்தார். அந்த அறிப்பின்படி கடந்த ஜூலை 3-ம் தேதி தலை மைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரூ.134 கோடியே 53 லட்சம் செலவில் வாங்கப்பட்ட புதிய பேருந்துகளை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத் தார்.

இதில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட படுக்கை வசதி, கழிவறை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி டும் ஒலிக் கருவி, பேருந்து நிறுத்தங்களைப் பயணிகளுக்கு தெரிவித்திடும் வசதி, பேருந்து நிலையங்களில் இவ்வகை பேருந்துகளை ஓட்டுநர்கள் தாமாகவே குறித்த இடத்தில் நிறுத்தம் செய்திட ஏதுவாக நவீன சென்சார் கருவி, நீண்ட தூர பயணங்களில் ஓட்டுநர் சோர்வடைவதைத் தவிர்த்திடும் எச்சரிக்கை ஒலிக் கருவி உள் ளிட்ட பல நவீன வசதிகளைக் கொண்டுள்ள பேருந்துகள் மற்றும் இடைநிறுத்தம் இல்லாத பேருந்துகள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள இந்த அரசு இந்த ஆண்டு (2018-2019) ரூ.600 கோடியில் மேலும் 3,000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்து, அதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் அறிவித்த வகையில், புதிய போக்குவரத்துக் கொள்கை, மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் அறி முகம், மாவட்ட அளவில் போக்கு வரத்துச் சேவையை மேம்படுத்து தல், அனைத்துப் போக்குவரத்துக் கழங்களையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து கணினிமய மாக்குதல், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துதல், மேலை நாடுகளில் நடைமுறையிலுள்ள புதிய வசதிகள் மற்றும் சேவைகள் அறிமுகம் உள்ளிட்ட 21 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

நிலுவைத் தொகை

மேலும், அனைத்திந்திய சாலைப் போக்குவரத்துக் கழகங் களின் கூட்டமைப்பின் விருதுகளை கடந்த 2013-ம் ஆண்டு முதல் போக்குவரத்துத் துறை தொடர்ந்து பெற்று வருகிறது.

கடந்த 2016-17-ம் ஆண்டுக் கான 35 விருதுகளில் 11 விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளன. ஓராண்டில், ரூ.2,247 கோடியே 39 லட்சம் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மூத்த குடிமக்க ளுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டையானது, ரூ.52 கோடியே 97 லட்சத்தில், 3 லட்சத்து 11 ஆயிரத்து 930 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.541 கோடியே 78 லட்சம் செலவில், 27 லட்சத்து 84 ஆயிரத்து 785 மாணவ மாணவியர்களுக்கு கையடக்க இலவச மற்றும் 50 சதவீத பேருந்து பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு மேலும் பயன் தருகின்ற வகையில் போக்கு வரத்துக் கழகங்களின் பேருந்து சேவைகள் தொய்வின்றித் தொடர்ந் திட அலுவலர்களாகிய நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்