பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: நள்ளிரவில் இருந்தே கல்லூரியை தேர்வு செய்த மாணவர்கள்

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்தே மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்ய தொடங்கினர்.

தமிழ்நாட்டில் 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப் படுகின்றன. நடப்பு கல்வி ஆண் டில் பொது கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்பில் சேர 1 லட் சத்து 59,631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர் களில் 1 லட்சத்து 4,453 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர்.

கடந்த ஆண்டு வரை பொறி யியல் படிப்புகளுக்கு நேரடி கலந் தாய்வு முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந் தாய்வு நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. எனினும் மாற்றுத்திற னாளிகள், முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசுகள், விளையாட்டு வீரர் கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் தொழிற்கல்வி பிரிவு மாணவர் களுக்கும் வழக்கம்போல் நேரடி கலந்தாய்வு நடத்தி முடிக்கப் பட்டது.

இந்த நிலையில், பொதுப்பிரி வினருக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறை ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. ஒவ்வொரு அமர்வுக்குரிய கட் ஆப் மதிப்பெண், அதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கலந்தாய் வுக் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப் பட்ட காலக்கெடு உள்ளிட்ட விவ ரங்களை அண்ணா பல்கலைக் கழகம் இணையதளத்தில் வெளி யிட்டது. அதோடு மாணவர்களுக் கும் அதற்கான போர்ட்டல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முதல் அமர்வுக்கு 200 முதல் 195 கட் ஆப் மதிப்பெண் பெற்ற 10,000 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கலந்தாய்வுக்கு கட் டணத்தை ஆன்லைன் மூலமாக வும் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் செலுத்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆன் லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்தே மாணவர்கள் கல்லூரியை தேர்வுசெய்யத் தொடங்கியதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட படி, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகள் மற் றும் பாடப்பிரிவுகளை வரிசைப் படி தேர்வு செய்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக் குள் அதை இறுதி செய்துவிட வேண்டும்.

அவர்களுக்கு 28-ம் தேதி (சனிக்கிழமை) தரவரிசை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப தற்காலிகமாக கல்லூரி மற் றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப் படும். அதை 29-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்குள் அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து 30-ம் தேதி (திங்கள்கிழமை) அவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பிடிஎப் வடிவில் இ-மெயில் மூலமாக அனுப்பப்படும்.

அதை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி யில் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும். ஒரு வேளை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவை ஏற்கவில்லை எனில் அவர்கள் 2-வது அமர்வு கலந் தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

மேற்கண்ட முறையில் ஆன் லைன் கலந்தாய்வுகள் 5 அமர்வு களாக ஒவ்வொன்றாக நடத்தப் படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்