கடத்தல் கும்பலிடமிருந்து மாணவியை மீட்ட இளைஞர்கள்: 2 பேர் கைது, மேலும் இருவர் தலைமறைவு

By செய்திப்பிரிவு

கத்தியைக் காட்டி மிரட்டி கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற கும்பலை இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று தடுத்த இளைஞர்களை பொது மக்கள் வெகுவாகப் பாராட்டினர். மாணவியை கடத்திய 2 பேர் பொது மக்களிடம் சிக்கினர். தலை மறைவான மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை கவுரி திருமண மண்டபம் அருகே கல்லூரிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, ஆம்னி காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி சுந்தரியை காரில் ஏற்றினர். தடுக்க முயன்ற பொதுமக்களை மிரட்டிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றனர்.

ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஹரீஷ்பாபு (35), துளசி (27) ஆகியோர் தைரியமாக இருசக்கர வாகனத்தில் கடத்தல் கும்பலை பின்தொடர்ந்து சென்றனர். 5 கி.மீ விரட்டிச் சென்று, கார் மீது கல் வீசி தாக்கினர். இதில், கார் கண்ணாடி உடைந்தது. ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார் சாலை யோரம் நின்றது. பொது மக்கள் கூடியதால் பயந்துபோன கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 2 பேர் பொது மக்களிடம் சிக்கினர். மற்ற 2 பேரும் ஓடிவிட்டனர். கல்லூரி மாண வியை மீட்ட பொதுமக்கள், பிடி பட்ட 2 பேரையும் ஆரணி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர்.

போலீஸார் நடத்திய விசார ணையில், பிடிபட்டவர்கள் ஆரணி அடுத்த பையூரைச் சேர்ந்த அருண்குமார், கலவை அகரத்தைச் சேர்ந்த சுரேஷ் என தெரியவந்தது. தச்சுத் தொழிலாளியான அருண் குமார், சுந்தரியை ஒருதலையாக காதலித்துள்ளார். அவரது காதலை சுந்தரி ஏற்க மறுத்துள்ளார். இத னால், நண்பர்கள் சுரேஷ், கண்ணன், தினேஷ் ஆகியோர் உதவியுடன் சுந்தரியை காரில் கடத் தியது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் நிலைய போலீ ஸார் வழக்கு பதிவு செய்து, சுரேஷ், அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய கண்ணன், தினேஷ் ஆகியோரைப் தேடி வருகின்றனர்.

இளைஞர்களுக்கு பாராட்டு

இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று, கடத்தல் கும் பலைப் பிடிக்க உதவிய இளை ஞர்கள் ஹரீஷ் பாபு, துளசி ஆகி யோரை ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் (பொறுப்பு) மற்றும் காவலர்கள் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்