குற்றங்களை கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள்: சென்னை போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னையில் வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது. குற்ற வழக்குகளைத் துப்பு துலக்குவதில் கண்காணிப்பு கேமராக்கள் போலீஸாருக்கு பெரிதும் உதவுகின்றன.

இதைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் சென்னையில் சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், தியாகராயநகர், கீழ்பாக்கம் உட்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா அமைக்க வசதியாக சென்னை யில் உள்ள 3 எம்.பி.க்களும் நிதியுதவி அளிப்பதாக மாநகர காவல் ஆணையரிடம் உறுதி அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொது மக்கள் தங்கள் வீடுகள், அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி காவல் துறை உயர் அதி காரிகள் நேரில் சென்று அறிவுறுத்தி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக் கள் மூலம் சென்னை நகரம் முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர தேவை யான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

இந்தியா

34 mins ago

கல்வி

55 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்