மழைக்காலத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ள சென்னை மாநக ராட்சி முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

சென்னையில் கடந்த இரு மாதங்களாக அவ்வப்போது பெய்த மழையில் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கிக் கிடந்தது. அப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் வடிகால்களில் உள்ள துவாரங் களை, மணல் மட்டும் கட்டுமானப் பொருட்கள் அடைத்துக் கொண் டிருந்ததால், மழை நீர் வடிந்து செல்ல முடியாத நிலை ஏற் பட்டது.

மழைநீர் வடிகால்களில் உள்ள துவாரங்களை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தாததே இதற்கு காரணம் என்று பெரம்பூர் 68-வது வார்டு, வியாசர்பாடி, புளியந்தோப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும், சென்னையில் பல இடங்களில் இன்னும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாமல் உள்ளன. அத்துடன் சாலைகளும் மோசமாக உள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

இந்க தற்காலிக நீர்நிலைகள், கொசு உற்பத்திச் சாலைகளாக மாறிவிடுவது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மழை பெய்தபோது, விரைவில் சாலைகள் அமைக்கப்படும், மழைநீர் வடிகால்கள் சரிசெய்யப்படும் என்றனர். ஆனால் ஓராண்டுக்குப் பிறகும் பல இடங்களில் அதே நிலைதான் நீடிக்கிறது.

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகளை விரைவாக செப்பனிடவும், மழைநீர் வடிகால் பிரச்சினை களை சரி செய்து கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் தயாராக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார் செய்தால் நடவடிக்கை

இது குறித்து மாநகராட்சி மழைநீர் வடிகால் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

பருவ மழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால்களில் தூர் வாரும் பணி அந்தந்த மண்டல அலுவலர்களால் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் சாலையில் மழை நீர் தேங்கும் பகுதிகள், மழைநீர் வடிகால்களில் தூர் வாரப்படாத பகுதிகள் குறித்து 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு சென்னை மாநகராட் சிக்கு தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

ஜோதிடம்

2 mins ago

தமிழகம்

44 secs ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

11 mins ago

சினிமா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

19 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்