பேருந்து கட்டணம், வரிகள் உட்பட அனைத்து கட்டணங்களுக்கும் ஒரே ஸ்மார்ட் அட்டை: அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அரசின் பல்வேறு சேவைகளுக் கான கட்டணங்களை ஒரே அட்டையில் செலுத்துவதற்கேற்ப, ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை அந்த அட்டை கள் மூலம் செலுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்கிடையே, சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற் கான ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை திட்டத்தை தனியாக செயல்படுத்தவும் அந்தத் துறை கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வியாசர்பாடி யைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு துறை யும் தனித்தனியாக ஸ்மார்ட் அட்டை வழங்கத் தொடங்கினால், ஒருங்கிணைந்த திட்டத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

எனவே அரசுத் துறைகளுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து சேவைகளுக் கும் ஒரே அட்டையைப் பயன் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

தி.நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த வி.எஸ்.ஜெயராமன் கூறும்போது, ‘‘மாநகராட்சி யின் முக்கிய பணிகளான, குப்பை அகற்றுவது, சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைத்து பராமரிப்பது, கொசு ஒழிப்பு போன்றவற்றில் மாநகராட்சி நிர்வாகம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. இந்த சூழலில், மாநகராட்சியே ஸ்மார்ட் அட்டை வழங்குவது அநாவசியமானது. அதைப் போக்குவரத்துக் கழகம் அல்லது மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் விட்டுவிடலாம்’’ என்றார்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஐசிஐசிஐ வங்கி மூலமாக ஒருங்கிணைந்த ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் அனைத்து சேவை களுக்கும் இதே அட்டையைப் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

41 mins ago

வணிகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்