ரூ.80 கோடி சிலைகள் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு- ஜூலை 4-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

கடந்த 2015-ல் சென்னை சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து சிவன்- பார்வதி ஐம்பொன் சிலை, வந்தவாசி அருகே செளந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து ஆதிகேசவபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய ஐம்பொன் சிலைகள், பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இருந்து வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய ஐம்பொன் சிலைகள் திருடு போயின.

இந்த சிலைகள் திருட்டு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 16 பேரில், 15 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், சிலைகளை கடத்திய முக்கிய குற்றவாளியான சென்னை புழலை அடுத்த காவாங்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் (எ) குமார் (45) கடந்த 20-ம் தேதி காவாங்கரையில் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், போலீஸ் விசாரணைக்கு அனுமதிக்கக் கோரி மனுதாக்கல் செய்தனர். நீதிமன்றம் 5 நாட்கள் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, ஜெயக்குமாரை திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணையை முடித்துக் கொண்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஜூலை 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தர விட்டார்.

இதையடுத்து, ஜெயக்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்