சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவகம் அமைப்பதற்கான டெண்டரை இறுதிசெய்ய இடைக்கால தடை: ஐஆர்சிடிசிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் உணவகம் அமைப்பதற்கான டெண்டரை இறுதி செய்ய ஐஆர்சிடிசிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உணவகம் அமைப்பதற்கு கே.எம். முஸ்தபா என்பவர் அளித்த டெண்டர் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “டெண்டருக்கு விண்ணப்பித்தவர்களில் அதிகத் தொகையாக ஒரு உணவகத்துக்கு ரூ. 5 கோடியே 28 லட்சமும், மற்றொரு உணவகத்தை அமைக்க ரூ.2 கோடியே 33 லட்சமும் தரத் தயாராக இருப்பதாக நான் தெரிவித்திருந்தபோதும், இதைவிட குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கேட்டவர்களுக்கு டெண்டரை ஒதுக்கியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, “டெண்டர் நடவடிக்கைகளை ஐஆர்சிடிசி மேற்கொள்ளலாம். ஆனால், டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவெடுக்க, வரும் 12-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஜுன் 12-ம் தேதிக்குள் ஐஆர்சிடிசி பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

க்ரைம்

3 mins ago

சினிமா

18 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்