பேரவை தொடரை புறக்கணித்ததன் மூலம் எதிர்க்கட்சி கடமையில் இருந்து திமுக விலகியுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்துள்ளதன் மூலம் எதிர்க்கட்சி என்ற முறையில் தனது கடமையைச் செய்யாமல் திமுக விலகியுள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்பேது எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக இழந்து நிற்பதைக் காண முடிகிறது. பேரவையில் மிக முக்கியமான பிரச்சினைகள், அதாவது துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து வரும் நிலையில் நடப்பு கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான திமுக அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி என்ற முறையில் தனது கடமையைச் செய்யாமல் திமுக விலகியுள்ளது. ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையை திமுக புறக்கணித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய 3 கட்சிகளும் சம அளவில் தவறு இழைத்துள்ளன.

இவ்வாறு அறிக்கையில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி யுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

ஆன்மிகம்

23 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

மேலும்