நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கு மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, ரூ.65 லட்சம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், “தான் வாங்கிய கடனுக்கு ரஜினிகாந்த் பொறுப்பு என்று கஸ்தூரி ராஜா எனக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் கஸ்தூரி ராஜாவோ அல்லது ரஜினிகாந்தோ என்னிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. எனவே, பொய்யான உத்தரவாதம் அளித்ததற்காக கஸ்தூரி ராஜா மீது ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் என்னிடம் வாங்கிய கடனுக்கு இருவருமே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், தன்னிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த வழக்கை போத்ரா தொடர்ந்துள்ளதாகவும், எனவே அந்த வழக்கை நிராகரிக்க வேண்டுமெனவும் ரஜினி தனது பதில்மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ரஜினிகாந்துக்கு எதிராக போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் தான் ரஜினியிடம் பணம் கேட்காத நிலையில் தனக்கு எதிராக அவர் தெரிவித்துள்ள கருத்து அவதூறாகும்.

எனவே அவர் மீது அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூன் 6-ம் தேதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டுமென்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கை நிராகரிக்கக் கோரி நான் பதில்மனுவில் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது அவதூறு கிடையாது. எனவே, இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீ்ஷ்குமார், மனுதாரரான ரஜினி காந்துக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு வரும் ஜுன் 25-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

30 mins ago

தொழில்நுட்பம்

34 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்