ஆளுநர் ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி கருத்து

By செய்திப்பிரிவு

மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆளுநர் ஆய்வு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள் ளார்.

சென்னையில் நேற்று நடந்த உலக சகோதரத்துவ நாள் விழா வில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சாதாரண அரசியல்வாதி அல்ல. பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆங்கில நாளிதழ் ஒன்றை நடத்தி வருபவர். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். எனவே, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது அவருக்குத் தெரியும்.

எந்தவொரு செயலை செய்யும் முன்பும் அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆராயும் ஆற்றல் அவருக்கு உண்டு. எனவே, மாவட்டங்களுக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசு நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து வருவதில் எந்தத் தவறும் இல்லை. ஆளுநர் வெறும் பொம்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

ஆளுநரின் நடவடிக்கையை எதிர்த்து திமுக கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தி வருவது தேவையற்றது. திமுகவைப் பொறுத்தவரை ஆட்சியில் இருந்தால் ஊழல் செய்வார்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவார்கள். ஆளுநர் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்