முதலிடம் பிடித்த சென்னை மாணவி: டெல்லி எய்ம்ஸில் படிக்க முடிவு

By செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரி சைப் பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை மாணவிக்கு டெல்லி எய்ம்ஸில் இடம் கிடைத்துள்ளதால், அங்கு மருத்துவம் படிக்க முடிவு செய்துள்ளார்.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தர வரிசைப் பட்டியல் தனித்தனியாக நேற்று வெளியிடப்பட்டது. அரசு இடங்களுக் கான தரவரிசைப் பட்டியலில் சென்னை மேற்கு தாம்பரத் தைச் சேர்ந்த கே.கீர்த்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

டாக்டர் தம்பதியான எஸ். காசி - கவிதாலட்சுமியின் மூத்த மகளான கீர்த்தனா, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தார். நீட் தேர்வில் 676 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 12-வது இடத்தைப் பிடித்தார். டெல்லி எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் 31-வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் நுழைவுத் தேர்வில் 5-வது இடமும் பெற்றுள்ளார்.

இதுபற்றி கீர்த்தானாவின் தந்தை டாக்டர் எஸ்.காசியிடம் கேட்டபோது, “எனது மகள் தரவரிசைப் பட்டிய லில் முதலிடம் பிடித்திருப் பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவருக்கு டெல்லி எய்ம் ஸில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதனால், தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் அவர் சேர முடியாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்