துணை பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் அவசியம் என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும்: யுஜிசி-க்கு தனியார் கல்லூரி ஊழியர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

துணை பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் அவசியம் என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அறிவித்துள்ளதை திரும்பப் பெற வேண்டுமென அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், 15 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை மாற்றி 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்று கடந்த டிசம்பர் மாதம் ஏஐசிடிஇ உத்தரவிட்டது. இதனால், நாடு முழுவதும் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர் மாணவர் விகிதத்தை முன்பிருந்தவாறே 1:15 என ஏஐசிடிஇ மாற்ற வேண்டும்.

மேலும், யுஜிசி ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பளம் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஏஐசிடிஇ இன்று வரை ஆறாவது ஊதியக்குழுவை பின்பற்றுகிறது. இதில் எந்த அமைப்பு பொறியியல் படிப்புக்கு தொடர்புடையது என மனித வள மேம்பட்டு கழகம் தான் பதில் சொல்ல வேண்டும். வரும் 2021-22-ம் கல்வியாண்டு முதல் துணை பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் அவசியம் என்று பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) அண்மையில் அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் என்பது ஆராய்ச்சி பட்டமாகும். இது ஆராய்ச்சியே தவிர படிப்பு அல்ல. எனவே, இந்த முடிவை யுஜிசி கைவிட வேண்டும்.

கல்லூரிகள் அரசின் எந்த ஊதிய வரம்பையும் பேராசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்துவதில்லை. வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, பணி நீக்கத்தின் போது நிலுவை தொகை, நஷ்ட ஈடு என எதுவும் கிடையாது. இதை விடக் கொடுமை, மாணவர் சேர்க்கைக்கு சில கல்லூரிகள் பேராசிரியர்களை கிராமம் கிராமமாக அனுப்புகின்றன. ஒரு பேராசிரியர் 10 மாணவர்களை சேர்த்தால் தான் ஊதியம் என சில கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆசிரியர்கள் தற்போது கல்லூரிகளுக்கு ஆள்பிடிக்கும் விற்பனை பிரதிநிதிகளாக மாற்றப்பட் டுள்ளனர்.

எனவே, கல்வித் தரம் மேம்படவும், கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் நம்பிக்கையோடு வருவதற்கான நடவடிக்கைகளையும் இரு அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்