பொள்ளாச்சி அருகே பள்ளிக் கட்டிடம் இடிந்து விபத்து: ஒடிசா தொழிலாளி பலி

By எஸ்.கோபு

பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியானார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜமீன் முத்தூர் கிராமத்தில் புதிதாக தனியார் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மூன்று மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் 3-வது மாடியில் தளம் அமைக்க சிமெண்ட் கலவை போடும் பணி நடைபெற்று வந்தது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் மேற்கூரைக்கான சென்டரிங் பலகைகள், இரும்பு ஆங்கிள்கள் உடைந்து விழுந்தன. இதில், இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர்.

இதில் ஒடிசாவைச் சேர்ந்த கண்ணன் (23) என்பவர் பலியானார். மேலும், படுகாயம் அடைந்த 2 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

கல்வி

50 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்