வங்கி வாடிக்கையாளர்களிடம் நூதன முறையில் ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது

By செய்திப்பிரிவு

நூதன முறையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவரது மகன் அமெரிக்காவில் உள்ளார். இவர் தனது தாயாருக்கு ரூ.1.40 லட்சம் அனுப்பி வைத்தார். இதைப் பெறுவதற்காக அவர் அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்குச் சென்று காசோலையைப் பூர்த்தி செய்து அதை அதற்கான பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றார்.

ஆனால், அவர் பணம் பெறாமலேயே பணம் பெற்றதுபோன்று அவரது செல்லுக்கு குறுந்தகவல் வந்தது. இதைக் கண்டு சித்ரா அதிர்ச்சி அடைந்தார். நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், சித்ரா வங்கிப் பெட்டியில் போட்ட காசோலையை சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42) என்பவர் திருடி அதன் மூலம் அவர் பணம் பெற்றது தெரியவந்தது. அவரைப் போலீஸார் கைது செய்தனர். வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீஸார் சுரேஷ் குமாரைக் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வாளர் நடராஜன் கூறும்போது, “தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ்குமார் இதுபோன்று கடந்த 4 ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். மோசடிப் பணத்தில் மனைவிக்கு நகைகள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆடம்பர செலவும் செய்துள்ளார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்