நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கால்வாய்களில் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும்: வேளாண் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் யோசனை

By செய்திப்பிரிவு

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்து வதற்கு குளங்களின் வரத்துக் கால்வாயில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே தீர்வாகும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் சி.ஆர்.சண்முகம் யோசனை தெரிவித்தார்.

‘குளங்களின் தொழில்நுட்பம் (இந்திய கிராமங்களின் பாரம்பரிய நீர் நிலைகள்)’ என்ற நூல் வெளியீட்டு விழா தானம் அறக்கட்டளை சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நூலை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் வெளியிட்டார். தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் (என்.ஐ.டி.டி.) இயக்குனர் மோகன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் முதல்வரும், தானம் அறக்கட்டளையின் ஆலோசகரு மான சி.ஆர்.சண்முகம் பேசிய தாவது:

இந்தியாவில் உள்ள குளங் களில் பெரும்பாலானவை கி.பி. 14-ம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டவையாகும். அந்தக் குளங்கள் பல நூற்றாண்டுகளாக மக்களுக்குப் பயன்பட்டு வரு கின்றன.

தண்ணீருக்கான தேவை அதிகரித்து வருவதால் புதிய குளங்களை வெட்டவும், ஏற்கனவே இருக்கும் குளங்கள், குட்டைகள், கிராமத்து ஊருணிகளை பெரியளவில் புனரமைக்கவும் பல்வேறு மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டிலும் மழை யளவு மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மாற்றம் இல்லை. இந்த நிலையில், இருக்கிற குளங்களுக்கான நீர்வரத்துக் கால்வாயில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இவ்வாறு சண்முகம் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தானம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பு அதிகாரி பி.ஏ.விசுவநாதன், செயல் இயக்குனர் எம்.பி.வாசிமலை, அண்ணா பல்கலைக்கழக நீர்வள ஆதார மைய இயக்குனர் என்.கே.அம்புஜம், கவுரவப் பேராசிரியர் ஆர்.சக்திவடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

44 mins ago

வாழ்வியல்

49 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்