தமிழகத்தில் தேர்தலை கண்டு ஆளும் கட்சி அஞ்சுகிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. தேர்தலை கண்டு ஆளும் கட்சி அஞ்சுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. தேர்தலை கண்டு ஆளும் கட்சி அஞ்சுகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு மக்களின் கருத்துகளை கேட்காமல் வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினரை கொண்டு மிகக்கடுமையாக நிலம் கையகப்படுத்தப்படுவதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீட் தேர்வு, காவிரி நீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, சேலம்-சென்னை 8 வழிச் சாலை எனப் பல பிரச்சினைகள் மக்களுக்கு எதிராக வரும்போது அரசை விமர்சித்து பலர் பல போராட்டங்களை நடத்துகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க அடக்குமுறையை அரசு கையாளுகிறது. தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிடக்கோரி ஜூலை 5-ம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போரா ட்டம் நடைபெறுகிறது. இதை திமுக செயல் தலைவர் ஸ்டா லின் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்