காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம்: அமைச்சர் வேலுமணி விமர்சனம்

By செய்திப்பிரிவு

 

காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசு வலியுறுத்திய அனைத்து அம்சங்களும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன. முழுமையான நல்லதொரு தீர்ப்பை பெற்றுள்ளோம். கர்நாடக அரசுதான் தண்ணீரை திறக்காமல் உள்ளது. தண்ணீரை பெற தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

காவிரி விவகாரத்தில் திமுகவினர் செய்த தவறுகள் அதிகம் என்று சொல்லலாம். காவிரி பிரச்சினை குறித்து 1971- 74ல் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றது, ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டது, 2006 - 11ல் மத்தியிலும், மாநில அரசிலும் பெரிய அதிகாரத்தை பெற்றிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது என திமுக செய்த தவறுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

கடந்த ஓராண்டில் எப்படியாவது ஆட்சி கலைந்துவிடும் என திமுகவினர் எதிர்பார்த்தார்கள். முடியாததால் தற்போது காவிரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். ஆனால் இதுபற்றி மு.க.ஸ்டாலினோ, திமுகவினரோ பேச எந்த தகுதியும் கிடையாது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

சினிமா

24 mins ago

விளையாட்டு

30 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

28 mins ago

மேலும்