ஸ்டெர்லைட் கலவரத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்: மொத்தமாக இன்று விசாரணை

By கி.மகாராஜன்

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும், ஆட்சியர் மீது கொலை வழக்கு பதியவும், காயமடைந்தோரை மதுரை மருத்துவமனைக்கு மாற்றக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தூத்துக்குடியில் கலவரத்தில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தென் மண்டல ஐஜி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் உயர் நீதிமன்ற கிளையில் பொது நலன் வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக விசாரிக்குமாறு விடுமுறைக் கால நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி கூறினார்.

இதையடுத்து மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், நேற்று உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உட்பட அனைத்து மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்