காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை: பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி பயணம்

By செய்திப்பிரிவு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துகாவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். முதல் வர் பழனிசாமி நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேலும் மே 3-க்குள் வரைவு அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதனிடையே தமிழக உள்ளாட்சி முறைமன்ற நடுவத்தின் அதிகாரியாக இருந்த சோ.அய்யரின் 3 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததால், அவருக்கு தமிழக அரசு பதவி நீட்டிப்பு வழங்கியது. இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் முறைப்படி பதவியேற்றார். அவருக்கு ஆளு நர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல் வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரி ஜா வைத்தியநாதன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஆளுநர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் அனைவரும் பங்கேற்றனர். அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் காவிரி விவகாரம் தொடர்பாக பேசியதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

முதல்வர் டெல்லி பயணம்

இந்நிலையில், முதல்வர் நாளை டெல்லி செல்கிறார். மகாத் மாகாந்தியின் 150-வது பிறந்த தின விழாவை கொண்டாட பிரதமர் மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் கூட்டத்தில் பங்கேற்க வரு மாறு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாளை காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வர், மாலை 5 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று இரவு டெல்லியில் தங்கும் அவர், மறுநாள் காலை 6 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வருகிறார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியை தனியாக சந்திக்கவும் முதல்வர் பழனிசாமி நேரம் கேட்டுள்ளார். அவ்வாறு நேரம் கிடைத்தால், காவிரி விவகாரம் குறித்து பேசுவதுடன், தமிழகத்தின் தேவைகளை கோரிக்கை மனு வாக அளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்