இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பவும் ஏற்பாடு

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி, தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அடுத்த சில வினாடிகளில் அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களிலும் அறிந்துகொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகியவற்றில் காண முடியும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. கடந்த ஆண்டு வரை தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள் பத்திரிகையாளர்களிடம் நேரில் வழங்கப்படும். இந்த நடைமுறையும் இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளி விவரங்களை தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு வரை ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை நடைமுறை இருந்ததால் தேர்வு முடிவு வெளியாகும் நாளில் டிபிஐ வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு முதல் ரேங்க் வெளியிடும் முறை கைவிடப்பட்டதால் தேர்வு முடிவுகள் தொடர்பான புள்ளி விவரங்களை பெற பத்திரிகையாளர்கள் மட்டுமே தேர்வுத் துறை அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பத்திரிகையாளர்களும் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் டிபிஐ வளாகம் வெறிச்சோடி காணப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

56 mins ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்