சிகிச்சையின் போது என்னென்ன சாப்பிட்டார்?- ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நேரத்தில் தனக்கு வேண்டிய உணவு குறித்து கைப்பட எழுதிய பதிவுகள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் உடல் நலம் தேறிவந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரம் அவரை யாரும் சந்திக்கவில்லை என்று ஒரு கருத்தும், சிலர் சந்தித்தார்கள் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் பெரிதாக பிரச்சினை கிளப்ப அதுகுறித்து ஒரு நபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டது.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதில் பலரும் தங்கள் தரப்பு சாட்சியத்தை அளித்து வருகின்றனர். இடையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.

ஆறுமுகசாமி ஆணையத்திலும் அதை அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் நன்கு உடல்நிலை தேறி வந்தார், திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும்விதமாக அந்த வீடியோ அமைந்தது.

இதற்கிடையே ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதா தரப்பு மருத்துவர் சிவகுமார் ஜெயலலிதா பேசிய ஆடியோ தொகுப்பின் பென் டிரைவை அளித்துள்ளார்.

அதில் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட அனுபவத்தை ஜெயலலிதா பேசுவதாக அமைந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2, 2016 அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுப் பட்டியலையும் மருத்துவர் சிவக்குமார் அளித்தார். அதில் பச்சை கலர் மையில் தனக்கு வேண்டியதை எழுதியுள்ளார்.

அதில் அதிகாலை 4.55க்கு லோட்டஸ் தண்ணீர், 5-05 லிருந்து 5.35 காலை உணவு இட்லி 1.5, பிரட் 4 ஸ்லைஸ், காஃபி 400 மில்லி, இளநீர் 230 மில்லி

5.45 மணிக்கு க்ரீன் டீ 200 மில்லி, 8 மணிக்கு ரிவைவ் 200 மில்லி, 8.55க்கு ஒரு ஆப்பிள், 9.40க்கு காஃபி 120 மில்லி, போர்பன் பிஸ்கெட் 5, காலை 11.35 மணிக்கு பாஸ்மதி ரைஸ் ஒரு கப்.

மதிய உணவு 2 மணியிலிருந்து 2.35 வரை பாஸ்மதி ரைஸ் 1.5 கப், தயிர் 1 கப், கிர்னி பழம் அரை கப், மதியம் 2.45க்கு ஜான்வியா என்கிற மாத்திரை, மாலை 5.45க்கு காபி 200 மில்லி.

இரவு உணவு மாலை 6.30 லிருந்து 7.15க்குள் வால்நட், உலர் பழங்கள் அரை கப், இட்லி உப்புமா 1 கப், தோசை 1, பிரட் 2 ஸ்லைஸ், பால் 200 மில்லி, பின்னர் 7.25க்கு மிக்னர் என்ற மாத்திரையும், ஜான்வியா என்ற மாத்திரையும் என தனது கைப்பட எழுதியுள்ளார்.

அவரது எடை 106.9 கிலோவாக இருந்துள்ளது. தனது உணவைக் கடுமையான கட்டுப்பாட்டுடன் கடைப்பிடித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 “எதிர்க்கட்சி என்பதால் சிக்கல்கள் இருக்கின்றன” - கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி வீடியோ பேட்டி 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

30 mins ago

சினிமா

34 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்