கதிராமங்கலத்தில் அனுமதியின்றி கூட்டம்; எம்எல்ஏ உள்ளிட்டோர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

கதிராமங்கலத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக எம்எல்ஏ உட்பட 26 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கதிராமங்கலத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி, அய்யனார்கோயில் திடலில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

காவல் துறையின் அனுமதி பெறாமல் இந்தக் கூட்டம் நடைபெற்றதாக முள்ளுக்குடி கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மதிமுக மாநில விவசாய அணி செயலாளர் முருகன், பாமக வழக்கறிஞர் பாலு, திரைப்பட இயக்குநர் கவுதமன், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், கதிராமங்கலம் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மதிமுக, அமமுக, எஸ்டிபிஐ, மனித நேய மக்கள் கட்சியினர் உட்பட 26 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தை கண்டித்து கதிராமங்கலத்தில் 367-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

வாழ்வியல்

14 mins ago

ஜோதிடம்

40 mins ago

க்ரைம்

30 mins ago

இந்தியா

44 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்