தமிழக கோயில் கோசாலைகள் நிலை ஆராய 3 பேர் கொண்ட குழு அமைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் உள்ள கோயில் கோசாலைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராய 3 பேர்கொண்ட குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு இரண்டு மாத காலத்துக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த ராதா ராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:

திருவண்ணாமலை கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த பசுக்கள் உயிரிழந்தது தொடர்பான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாடு முழுவதும் கோயில் களின் பராமரிப்பில் உள்ள பசுக்கள் மற்றும் கன்றுகளின் மிக மோசமான நிலையை உணர்த்துவதாக இந்த சம்பவம் உள்ளது.

கோசாலையில் கால்நடை களை பராமரிப்பது தொடர்பாகதெளிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஏற்கெனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது. கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக் களை விற்பனை செய்யக் கூடாது; கோசாலைகளில் உள்ள மாடுகளுக்கு தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும்; கோசாலைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல வழிகாட்டு நெறி முறைகளை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது.

எனினும், அதன்பிறகும் கோசாலைகளில் உள்ள பசுக்கள் மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன. இதனால் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஏராளமான பசுக்கள் உயிரிழந் துள்ளன.

ஆகவே, தமிழகக் கோயில் களில் உரிய பராமரிப்பின்றி உள்ள பசுக்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், அந்தத் திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்திட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது,கோசாலைகளின் நிலை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவஅமைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

“கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அனந்த பத்மநாபன் குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில்

கால்நடை மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.சுமதி குழு உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்கின் மனுதாரரே குழுவின் மூன்றாவது உறுப்பினராக இருக்கலாம்.

இந்த 3 நபர்கள் குழுவானது தமிழ்நாட்டில் உள்ள கோசாலை களின் தற்போதைய நிலை குறித்து ஆராய்ந்து, அது தொடர்பான அறிக்கையை 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும். மீண்டும் இந்த வழக்கு அக்டோபர் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்