கர்நாடகாவில் ஆளுநரின் முடிவு தன்னிச்சையானது; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அவசரமாக அழைத்திருப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத சூழலில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக அம்மாநிலத்தில் உருவெடுத்தது.

காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, அவர்களை ஆட்சி அமைக்கக் கோரியது. இதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம்தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும் கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள்.

அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனைத் தொடர்ந்து பாஜகவை ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) காலையில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநில ஆளுநர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் – பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்எல்ஏக்கள் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பாஜகவை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அதிமுக அரசை பாதுகாக்க பாஜக எடுத்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பு; அவல நாடகத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது: திருமாவளவன்

‘ஜனநாயகத்தை படுகொலை செய்த காங்கிரஸ்’- ராகுல் மீது அமித் ஷா காட்டம்

கர்நாடக மாநிலத்தில் வீசிய பிரதமர் நரேந்திர மோடி புயல்

11 வருடங்களுக்குப் பிறகு படம் இயக்குகிறார் டி.ஆர்: நமிதாவிடம் பேச்சுவார்த்தை?

 

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்