அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமன விவகாரம்: கமல் கருத்து

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக கர்நாடாகவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் அண்ணா பல்கலைகழகத்துக்கு கர்நாடகவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருருக்கிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது  குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நாகேஷ் என்னுடைய ஆசிரியர்களில் ஒருவர். ராஜ்குமார், சரோஜா தேவி மற்றும் என்னுடைய நண்பர்களான ரஜினிகாந்த், அம்பரிஷ் ஆகியோர் எனக்கு சொந்தமானவர்கள்தான். அதற்காக மத்திய, மாநில அரசுகள் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லாவற்றையும் தாண்டி தமிழ்நாட்டுக்கு தேவை தண்ணீர்'' என்று பதிவிட்டுள்ளார்.

நாகேஷ், ராஜ்குமார், சரோஜா தேவி, ரஜினிகாந்த், அம்பரிஷ் ஆகியோர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்