புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயலை தொல்லியல் துறை மேற்கொள்ள கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: புராதன சின்னங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை மேற்கொள்ளக் கூடாது என தொல்லியல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் டி.மாங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு இந்திய தொல்லியல் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள அதிகாரிகள் முறையாக அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம். குறிப்பாக யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத்அமர்வு பிறப்பித்த உத்தரவு:

நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைகளின் கடமை.புராதன சின்னங்களுக்கு ஆபத்தைவிளைவிக்கும் எந்த செயல்களை யும் அவர்கள் மேற்கொள்ளக் கூடாது.

மேலும், கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டப்படும்உணவகம், கழிப்பறைகளை ஆய்வு செய்து, அவை புராதன சின்னங்களுக்கு அபாயகரமானவை யான தல்ல என்பதை உறுதி செய்யவேண்டும். மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் இவைஅமைய வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை பரிசீலித்து, இந்திய தொல்லியல் துறை 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

க்ரைம்

8 mins ago

உலகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்