மேம்பால முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க மனு: மனுதாரர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்குஎதிரான மேம்பால முறைகேடு வழக்கை 18 ஆண்டுகளுக்கு முன்பாக பேரவைத் தலைவர் திரும்பப் பெற்றதை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா? என்பது குறித்து மனுதாரர் தரப்பில் விளக்க மளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.115 கோடி முறைகேடு: கடந்த 1996 - 2001திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் பல்வேறுஇடங்களில் மேம்பாலங் கள் கட்டப்பட்டதில் ரூ.115 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, கடந்த 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர்2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கைத்தொடர அனுமதியளித்த உத்தரவை பேரவைத் தலைவர் திரும்பப்பெற்ற தால் வழக்கு கைவிடப் பட்டது.

இந்நிலையில் மேம்பால முறைகேடு தொடர்பாக தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்பொன்முடி ஆகியோருக்குஎதிரான வழக்கை திரும்பப்பெற்று பேரவைத் தலைவர் 2006-ம் ஆண்டு பிறப்பித் துள்ள உத்தரவை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமைநீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

முன்மாதிரி தீர்ப்பு: அப்போது நீதிபதிகள், பேரவைத் தலைவர் 18ஆண்டுகளுக்கு முன்பாகபிறப்பித்த உத்தரவைஎதிர்த்து தற்போது வழக்குத் தொடர முடியுமா? என்பது குறித்து, முன்மாதிரி தீர்ப்புகளுடன் விளக்க மளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள் ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தொழில்நுட்பம்

13 mins ago

உலகம்

27 mins ago

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

21 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்