மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்: நெல்லையில் கனிமொழி எம்பி கைது

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால், மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்பி உட்பட 202 பேர் கைது செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் இரா.ஆவுடையப்பன், அப்துல்வகாப், சிவபத்மநாபன், எம்எல்ஏக்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், முன்னாள் எம்எல்ஏக்கள் அப்பாவு, ரசாக் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட கனிமொழி எம்பி உட்பட 202 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தள்ளிப்போடுவது கண்டிக்கத்தக்கது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

31 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்