நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது விதிமீறல் வழக்கு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் வடக்கு ஒன்றியம் இருக்கன்துறை, கண்ணன்குளம் கிராமங்களில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் ஞாயிறு இரவில் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிகளின்படி இரவு 10 மணிக்குமேல் வாக்கு சேகரிக்கக் கூடாது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக பறக்கும்படை அதிகாரி தினேஷ் குமார் அளித்த புகாரின்பேரில் பழவூர் போலீஸார் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சுற்றுச்சூழல்

5 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

45 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்