காவலர் விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் பரிசு வழங்கினார்

By செய்திப்பிரிவு

காவல் துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசு வழங்கினார்.

சென்னை காவல்துறையினரை ஊக்குவிக்கவும், காவல்துறை மற்றும் பொது மக்களிடையே நல்லுணர்வை ஏற்படுத்தவும் கடந்த 30-ம் தேதி முதல் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் போட்டி கள் நடத்தப்பட்டன. சென்னை பெருநகர காவல் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 4 சட்டம் ஒழுங்கு மண்டலங்கள், போக்குவரத்து காவல், ஆயுதப்படை மற்றும் மத்திய குற்றப்பிரிவு என மண்டலங்கள் வாரியாக காவல்துறையினர் இதில் கலந்துகொண்டனர்.

கபடி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் இதில் நடத்தப்பட்டன. மொத்தம் 2000 பேர் கலந்து கொண்ட இப்போட்டிகளில் 720 பேர் வெற்றி பெற்றிருந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாய் (தலைமையிடம்), எச்.எம்.ஜெயராம் (வடக்கு), எம்.சி.சாரங்கன் (தெற்கு), எம்.டி.கணேசமூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்