இலங்கை அரசின் அவதூறு செய்திக்கு பேரவையில் விவாதம் தேவை இல்லை: பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘‘இலங்கை அரசின் அவதூறு செய்தி பற்றி, சட்டப்பேரவையில் விவாதிக்க அவசியம் இல்லை’’ என்று பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. அந்த செய்தியையும் இணையதளத்தில் இருந்து நீக்கியது.

‘இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும்’ என சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பேரவைத் தலைவர் ப.தனபால், ‘‘இலங்கை அரசின் அவதூறு செய்திக்கு முதல்வரின் பின் நின்று அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பணிந்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. எனவே, அந்த பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்த தேவை இல்லை’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்