உலக முதலீட்டாளர் மாநாட்டு தனி அலுவலர் நியமனம்: இன்று முதல் மாநாட்டு தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

By செய்திப்பிரிவு

தமிழக அரசு சார்பில் இந்தாண்டு நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தனி அலுவலராக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. 2015-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து, தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து துறைகளின் அனுமதிகளை வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை 61 திட்டங்கள் மூலம் ரூ.62,738 கோடிக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 76,777 பேருக்கு வேலை ஏற்படுத்தப்பட்டதாக தொழில்துறை தெரிவித்தது.

கடந்த 30-ம் தேதி முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, மாநாட்டுக்கான தேதியை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என தொழில்துறை வட்டாரங்கள் கூறின. இந்நிலையில் இந்த மாநாட்டுக்கான தனி அலுவலராக அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். மாநாடு தொடர்பான தொடக்கப்பணிகளை இன்று முதல் அவர் மேற்கொள்வார் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்