மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக புது இணையதளம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற தன் கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை தொடங்கியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று தனது கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். பிறகு 'மக்கள் நீதி மய்யம்' தான் தன் கட்சியின் பெயர் என்று கமல் அறிவித்தார். இந்நிலையில், கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி அன்று 'மய்யம் விசில்' செயலியை அறிமுகப்படுத்தினார். பிரச்சினைகளைப் பற்றி மக்களோடு பேசித் தீர்க்க 'மையம் விசில்' செயலியை அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

தற்போது மய்யம்.காம் என்ற இணையதளத்தை கமல் தொடங்கியுள்ளார். அதில், 70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காகச் செயலாற்ற வேண்டிய தருணம் இது . மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே என்ற வாசகங்களுடன் இணையத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்